நாடோடிகள்: எம்பி ஆனார் ரோஜா!

தெலுங்கில் தயாராகும் நாடோடிகள் ரீமேக்கில் ரவுடி எம்பி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர் ரோஜாதான். இது தவிர மேலும் 5 புதிய தெலுங்குப் படங்களிலும் நடிக்கிறாராம்.
தேர்தல், அரசியல் எதுவும் கைகொடுக்காததால் மீண்டும் முழு வீச்சில் கலைச் சேவை செய்ய வந்துவிட்டதாகவும், அரசியலை விட இது எவ்வளவே மன நிறைவைத் தருவதாகவும் ரோஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:
நான் அரசியலுக்கு வந்த போது சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். இதனால் என்னை தேடி வந்த எக்கச்சக்கமான தமிழ், தெலுங்கு பட வாய்ப்புகளைக் கூட நிராகரித்தேன்.
ஆனால் சமீப காலமாக அரசியலில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் என்னை சினிமாவில் நடிக்க வைத்துவிட்டன. ஒரே சமயத்தில் 5 படங்களில் நடித்து வருகிறேன்.
நாடோடிகள் படத்தை தெலுங்கில் எடுக்கிறார்கள். இதில் நான் எம்.பி. வேடத்தில் நடிக்கிறேன்.
சினிமாவில் நடிப்பது மனதுக்கு நிறைவாகவும் நிம்மதியாகவும் உள்ளது, என்றார்.


Click it and Unblock the Notifications











