சமீராவுக்கு ப்ரியதர்ஷன் தந்த பிறந்த நாள் பரிசு!

By Staff

Sameera Reddy
சமீராவுக்கு இந்தப் பிறந்த நாள் சாதாரணமான ஒன்றாகத்தான் இருந்திருக்கும், ப்ரியதர்ஷன் மட்டும் வராமல் போயிருந்தால்!

சமீரா ரெட்டிக்கு பெரிய ஹிட் படம் கொடுத்தவர் ப்ரியதர்ஷன்தான். திடீரென்று சமீராவின் பிறந்த நாள் விருந்தினராக வருகை தந்த அவர், சமீராவை அழைத்து, எனது அடுத்த படத்தில் நீதான் நாயகி என்று கூற ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனாராம் சமீரா.

ப்ரியதர்ஷன் - லிஸ்ஸி தம்பதிகளுக்கு ரொம்ப நெருக்கமானவர் சமீரா. எப்போது சென்னை வந்தாலும் நேராக ப்ரியதர்ஷன் வீட்டுக்கு ஒரு விஸிட் அடித்துவிடுவாராம்.

இவர்கள் மூவரின் நெருக்கத்துக்கும் இன்னொரு காரணம் உண்டு. லிஸ்ஸி- ப்ரியதர்ஷன் திருமண நாளும், சமீராவின் பிறந்த தினமும் ஒரே தேதியில் வருவதுதானாம்.

இந்த ஆண்டு இவர்கள் மூவருமே ஒன்றாக தங்கள் விசேஷங்களைக் கொண்டாடியுள்ளனர். ஒரு பெரிய கேக் ஆர்டர் செய்து, மூவர் சார்பிலும் சமீரா அதை வெட்ட, சென்டிமெண்ட், அன்பு, நட்பு எல்லாம் ஆறாக ஓடியதாம் அங்கு.

பீகாரை மையமாகக் கொண்டு ப்ரியதர்ஷன் இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் சமீரா நடிக்கிறாராம். இதில் அஜய் தேவ்கன், அக்ஷய் கன்னா மற்றும் பிபாஷா பாஸுவும் நடிக்கிறார்கள்.

தொடர்ந்து மூன்று படங்கள் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடித்தது தனக்குப் பெருமையாக உள்ளதாக தெரிவித்தார் சமீரா.

கேரியர் ஸ்டெடியாக இருந்தாலும், வாழ்க்கையில் இன்னும் தனக்கேற்ற ஆண் துணை இல்லாமல் இருப்பதில் சமீராவுக்கு ஏக வருத்தமாம். இதைப் போக்குவது யோகாதான் என்கிறார் சமீரா.

'உடலை அழகாக மட்டும் வைத்துக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது, மனதுக்குப் பிடித்தவர் அருகிலிருந்து அதை ரசிக்காத வரை!' என்கிறார் சமீரா.

நல்ல சிந்தனைதான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X