சனாவுடன் இணையும் சாந்தனு

கே.பாக்யராஜின் சாந்தனும் ஒரு ஹீரோவாக உலா வருகிறார். இதுவரை அவருக்குப் பிரேக் கிடைக்கவில்லை. அதற்காக பாக்யராஜ் கடுமையாக திட்டமிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சாந்தனு ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஆயிரம் விளக்கு என பெயரிட்டுள்ளனர். இதில் அவருக்கு ஜோடி போடுபவர் சனா கான்.
சிலம்பாட்டம் படத்திற்குப் பிறகு சனா கானை பெரிதாக காணவில்லை. பரத்துடன் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் சாந்தனுவுடன் இணைகிறார்.
இவர்கள் தவிர படத்தில் சுஜாவும் இருக்கிறார். கஞ்சா கருப்பு காமெடிக்காக புக் ஆகியுள்ளார். வில்லத்தனம் செய்யப் போகிறவர் சுமன்.
படத்தை இயக்கப் போவது ஹோசிமின்.
ஆயிரம் விளக்கின் கதை என்ன என்று ஹோசிமின்னிடம் கேட்டால் இது தாதா கதை என்றார்.
அதானே, ரத்தமும், சதையும் பார்க்காமல் நம்மவர்களுக்குத் தூக்கம் வராதே...!
Comments


Click it and Unblock the Notifications