ஓடிப்போக ஆசை! - சந்தியா

ஆனால் சந்தியாவோ அசராமல் அடிக்கிறார் இப்படி...
"எனக்கு காதல் பண்ண ஆசைதான். ஆனா அதுக்கான நேரமும் இல்ல... பொருத்தமான பையனும் தமிழ் சினிமால இல்ல. பார்ட்டிகள்ல, பல நடிகைகள் தங்களோட பாய் பிரண்ட்ஸோட வந்து இறங்கிறதைப் பார்த்திருக்கேன். ஆனால் என்னை என்னோட பெற்றோர் அப்படி வளர்க்கலை..." எனும் சந்தியா, இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஓடிப்போலாமா.
"இந்தப் படம் ரொம்ப ஜாலியான கதை. இதை எனக்கு அந்த டைரக்டர் விவரிக்கும் போதே ரொம்ப பிடிச்சுப் போச்சி. இப்போ எனக்கே ஓடிப்போலாம் போல ஆசையா இருக்கு. வீட்டை விட்டு ஓடிப்போறது கூட இத்தனை ஜாலியான விஷயமான்னு ஆச்சரியமா இருக்கு" என்கிறார்.
அடுத்து இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் 20 நிமிடம் கெஸ்ட் ரோலில் வருகிறாராம் சந்தியா. இந்தப் படத்தில் அவருக்கு செவ்விந்திய இளவரசி வேடமாம்.
Comments


Click it and Unblock the Notifications