»   »  முத்தத்திற்கு மறுப்பு-ஷ்ரியா வாக் அவுட்!

முத்தத்திற்கு மறுப்பு-ஷ்ரியா வாக் அவுட்!

Subscribe to Oneindia Tamil
Shreya
கந்தசாமி பட ஷூட்டிங்கின்போது விக்ரமுக்கு முத்தமிடுவது போன்ற காட்சியில் அடுத்தடுத்து இயக்குநர் டேக் வாங்கியதால் அப்செட் ஆன நடிகை ஷ்ரியா படப்பிடிப்பிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.

கலைப்புலி தாணு தயாரிப்பில், சுசி.கணேசன் இயக்கத்தில் விக்ரம், ஷ்ரியா நடிக்கும் படம் கந்தசாமி. இப்படத்தின் படப்பிடிப்பு படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில மெக்சிகோ சென்று பல காட்சிகளை சுட்டனர்.

தற்போது சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி நகரில் ஷூட்டிங் நடந்து வருகிறது. விக்ரமுக்கு, ஷ்ரியா முத்தமிடுவது போன்ற காட்சியை படமாக்கினார் சுசி.கணேசன். இது லிப் டூ லிப் முத்தம் என்று கூறப்படுகிறது.

இரண்டு முறை ஷ்ரியா முத்தம் கொடுத்தும், சுசி.கணேசனுக்கு திருப்தி வரவில்லையாம். இதனால் மறுபடியும் ஒரு முறை முத்தமிடுமாறு ஷ்ரியாவைக் கேட்டுள்ளார்.

ஆனால் ஷ்ரியா அப்செட் ஆகி விட்டார். இதுவரை கொடுத்ததே சரியாகத்தான் உள்ளது. அதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் இன்னொரு முறை முத்தம் கொடுத்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார் சுசி.கணேசன்.

இதனால் கோபமாகி விட்டாராம் ஷ்ரியா. ஸாரி, நான் வருகிறேன் என்று கூறி விட்டு டக்கென இடத்தைக் காலி செய்து விட்டு வெளியேறி விட்டார்.

இதனால் சுசி.கணேசன், விக்ரம் உள்பட அனைவரும் ஸ்டன் ஆகி நின்று விட்டார்களாம்.

ஏற்கனவே இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஷ்ரியா ஒரு பாட்டுக்கு ஆடியதால் கடுப்பாக இருக்கிறாராம் சுசி.கணேசன். அதைத்தான் இப்படி ஷ்ரியாவிடம் அடிக்கடி காட்டுவதாக ஒரு கிசுகிசு உலவுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil