'சிங்கிள்' சீனில் சினேகா

பெரிய அளவில் கவர்ச்சி காட்டாமல் தொடர்ந்து திரைக் களத்தில் பிசியாக இருக்கும் நாயகி சினேகா. ஆனால் காலத்தின் கோலமாய், இப்போது அவரும் கவர்ச்சிக்குத் தாவ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
கோவா படத்தில் பிகினியில் எல்லாம் நடித்திருப்பதாக சினேகா குறித்து சூடான டாக் உலவி வருகிறது. அந்த ஸ்டில்களும் விரைவில் வெளியாகப் போகிறதாம்.
படு பிசியாக நடித்துக் கொண்டுள்ள நிலையிலும் ஒரு படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்துக் கொடுத்துள்ளார் சினேகா.
அது தீராத விளையாட்டுப் பிள்ளை. விஷால் ஹீரோவாக நடித்துள்ள படம். இப்படத்தில் டாக்டர் வேடத்தில் ஒரு சீனில் மட்டும் வருகிறாராம் சினேகா.
வழக்கமாக கெளரவ வேடங்களில் நடிக்கக் கூப்பிட்டால் மறுத்து விடுவார் சினேகா. ஆனால் இந்தப் படத்தில் மட்டும் கெளரவ கேரக்டரில் நடிக்க எப்படி ஒத்துக் கொண்டார் என்பது தெரியவில்லை.
கவர்ச்சிக் கொள்கையை தளர்த்தியதைப் போல கெளரவத்தையும் தளர்த்திக் கொண்டுள்ளார் போல...


Click it and Unblock the Notifications











