பாலு மகேந்திரா படத்தில் தபு

By Staff

Tabu with Balakrishna
பாலுமகேந்திரா நீண்டஇடைவெளிக்குப் பிறகு இயக்கவுள்ள புதிய படத்தில் தபு நடிக்கவுள்ளார்.

ராஜேஷ்வர் தயாரிப்பில், பாலு மகேந்திரா இயக்கத்தில் அனல் காற்று என்ற பெயரில் புதிய படம் உருவாகிறது. இப்படத்தில் தபு நாயகியாக நடிக்கவுள்ளார்.

படத்தின் கதையை பாலுமகேந்திரா கூறியதுமே, நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம் தபு. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக பாலு மகேந்திராவின் முதல் படமான கோகிலாவிலிருந்து அனல் காற்று வரை பாலு - ராஜா கூட்டணி தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தபு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு திரும்பி வருகிறார். கடைசியாக அவர் தலை காட்டிய படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். அந்தப் படத்தோடு தமிழை விட்டுப் போனார் தபு.

முன்னதாக ஜக்குபாய் படத்தில் சினேகாநடிக்கவிருந்த கேரக்டருக்கு தபுவை பேசினார்கள். ஆனால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் தபு. இந்த கேரக்டர், இன்னொரு நாயகியான ஷ்ரியாவுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பதால் நடிக்க மறுத்து விட்டாராம் தபு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X