twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விமலா ராமனின் லவர்பாய்!

    By Staff
    |

    Vimala Raman
    தெலுங்கில் முழுவீச்சில் இறங்கிவிட்டார் விமலா ராமன். வருண் சந்தேஷுடன் முதல் படத்தில் நடித்த அவர், இப்போது தருணுடன் அடுத்து ஜோடி சேருகிறார். படத்துக்குப் பெயர் லவர் பாய்.

    இந்தப் படத்தின் துவக்க விழா சமீபத்தில் ஹைதராபாத் பிலிம் சிட்டியில் நடந்தது.

    சிரஞ்சீவி க்ளாப் அடித்து படப்பிடிப்பைத் துவங்கி வைத்தார். பட அதிபர் டி சுரேஷ்பாபு கேமராவை முடுக்கி வைத்தார்.

    இந்தப் படம் ஒரு காதல் கதை. பெரும்பாலான பகுதிகள் வெளிநாடுகளில் எடுக்கப்படவுள்ளன.

    இனி தமிழ்ப் படங்களில் நடிக்க மாட்டாரா?

    "நடிக்கக் கூடாது என வேண்டுதலா என்ன... நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருந்தேன். இப்போதும் இரண்டு தமிழ் படங்களில் நடித்துக் கொண்டுதானிருக்கிறேன். நான் எதிர்பார்த்த வாய்ப்புகள் இன்னும் வரவில்லை. அதனால் இப்போது தெலுங்கில் கிடைக்கும் நல்ல படங்களை ஒப்புக் கொள்கிறேன். மலையாளத்திலும் நடிக்கிறேன்..." என்கிறார் விமலா ராமன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X