சினிமாவுக்கு 'குட்பை'-டிவி சீரியல்களுக்குத் தாவும் பாரதி
நடிகை பாரதி மீண்டும் சினிமாவுக்கு வரவிருந்த முடிவை மாற்றிக் கொண்டு விட்டார். டிவி சீரியல்களில் மட்டும் நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.
அம்முவாகிய நான் படத்தின் மூலம் பிரபலமானவர் பாரதி. முதல் படத்திலேயே விலைமாது வேடத்தில் நடித்திருந்தார். இந்த கேரக்டர் அவருக்கு சினிமாவில் ஒரு ஏற்றத்தைக் கொடுத்தது. நிறைய பட வாய்ப்புகள் வரத் தொடங்கிய நிலையில் திடீரென தனது உறவினரை கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் பாரதி.
இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் தற்போது தனது முடிவை அவர் மாற்றிக் கொண்டுள்ளாராம். மாறாக, டிவி தொடர்களில் நடிக்க தீர்மானித்துள்ளாராம்.
சினிமாவில் எனக்கேற்றது போன்ற கேரக்டர்கள் வரவில்லை. முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களாக சொல்கிறார்கள். எனவேதான் சினிமா வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.
மாறாக சில சீரியல் வாய்ப்புகள் வந்துள்ளன. நன்றாகவும் உள்ளன. எனவே சீரியல்களில் நடிக்கலாம் என தீர்மானித்துள்ளேன். மேலும் டிவி சீரியல்களில் நடித்தால் குழந்தையையும் பார்த்துக் கொள்ள நேரம் கிடைக்கும் என்பதால் இந்த முடிவு என்கிறார் பாரதி.


Click it and Unblock the Notifications











