டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா

மகேஷ் பூபதி முன்பு ஸ்வேதா ஜெய்சங்கரை மணந்தார். இந்தத் திருமணம் சமீபத்தில் முறிவடைந்தது. முறைப்படி இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது லாரா தத்தாவை மகேஷ் பூபதி மணக்கவுள்ளாராம்.
ஸ்வேதாவை பிரியும் முன்பாகவே லாராவுடன் மகேஷ் பூபதிக்கு காதல் மலர்ந்ததாக செய்திகள் வெளியாகின. இருப்பினும் அதை பூபதியும், லாராவும் மறுத்து வந்தனர். இந்த நிலையில் இப்போது பூபதி விவாகரத்து செய்து கொண்டதைத் தொடர்ந்து லாராவை மணக்க முடிவு செய்துள்ளார்.
இதற்கான நிச்சயதார்த்த நிகழ்ச்சி நியூயார்க் நகரில் வைத்து நடந்துள்ளது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது மகேஷ் பூபதியுடன் லாரா தத்தாவும் உடன் இருந்தார்.
தனது நிச்சயதார்த்தத்தை உறுதி செய்துள்ள பூபதி திருமணம் விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தார்.
Comments
actress lara dutta டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா லாரா தத்தா lara to wed mahesh bhoppathy tennis player mahesh bhoopathy


Click it and Unblock the Notifications