மலையாள வில்லனுடன் காதலில் மீரா வாசுதேவன்

பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷாலை காதலித்து பின்னர் மணந்து கொண்டார் மீரா. ஆனால் இது நிலைக்கவில்லை. இருவருக்கும் பிரச்சினை ஏற்படவே விவாகரத்து கோரி விண்ணப்பித்தார் மீரா. சமீபத்தில் சென்னை குடும்ப நல கோர்ட் விவாகரத்து அளித்து இருவரையும் விடுவித்தது.
இந்த நிலையில் அடுத்த காதலில் தீவிரமாகி விட்டார் மீரா வாசுதேவன். இந்தக் காதல் அவரது வாழ்க்கையை அழகாக்கி இருக்கிறதாம். இம்முறை மீரா காதல் கொண்டிருப்பது மலையாள வில்லன் நடிகர் ஜான் கொக்கனுடன்.
மலையாளியான ஜான் கொக்கன் வளர்ந்தது மும்பையில். தற்போது மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களில் வில்லனாக பிரபலமாகி வருகிறார்.
இவருக்கும், மீராவுக்கும் இடையே இன்டர்நெட் மூலமாகத்தான் காதல் மலர்ந்ததாம். பேஸ் புக்கில் மீராவைத் தொடர்பு கொண்டு ஜான் பேச, மீராவும் பதிலளிக்க தொற்றிக் கொண்டதாம் காதல் வைரஸ்.
இந்தக் காதல் இப்போது ஆழமாக வேரூண்றி விட்டதாம். அதாவது விஷாலுடனான விவாகரத்து வழக்கு மும்முரமாக இருந்தபோதுதான் இந்தக் காதலும் படு தீவிரமாக வளர்ந்துள்ளது.
தங்களது இந்தக் காதல் குறித்து மீரா கூறுகையில், தினமும் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் ஒன்றாக பயணம் செய்தோம். விரைவிலேயே என்னை முழுமையாக ஆக்கிரமித்து விட்டார். நிறைய இடங்களுக்கு ஒன்றாக சென்று சுற்றி பார்த்தோம்.
முதல் கணவருடன் சமீபத்தில்தான் எனக்கு விவாகரத்து கிடைத்தது. புது காதலால் எனது வாழ்க்கை தற்போது சந்தோஷமாக மாறி இருக்கிறது. என் வாழ்க்கை ஜான் கோக்கன் வரவால் அழகாக மாறி இருக்கிறது என்கிறார் மீரா புத்துணர்ச்சியுடன்.
6.2 அடி உயரம் கொண்ட ஜான், லவன் இன் சிங்கப்பூர் என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் நாயகன் மம்முட்டி. தற்போது சுரேஷ் கோபியுடன் ஐஜி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கன்னடத்திலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் டான் சீனா படத்தில் நடித்துள்ளார். தமிழிலும் நடிக்க முயற்சித்து வருகிறாராம். அவர் நடித்த முதல் படம் கலாபம். 2008ல் மலையாளத்தில் வெளியான படம்.
கராத்தே, கிக் பாக்ஸிங் என பல ஐட்டங்கள் ஜானுக்குத் தெரியுமாம். உடலையும் முறுக்கேற்றி வைத்துள்ளார். கடந்த 9 வருடங்களாக கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை வனப்பாக்கி வைத்திருக்கிறாராம்.
சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருக்கிறார் மீரா!


Click it and Unblock the Notifications











