சந்தியாவின் கன்னடத்து சந்தோஷம்!

தமிழில் சந்தியாவுக்கு சுத்தமாக வாய்ப்புகள் இல்லாத நிலை. இந்த நிலையில் இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் மூலம் அவருக்கு ஆதரவு கிடைத்துள்ளது.
ஆனால் எதிர்பாராத ஆச்சரியமாக கன்னடத்திலிருந்து நிறைய வாய்ப்புகள் ஓடி வருகிறதாம். எல்லாம் ஆப்தரட்சகாவின் வெற்றிதான் காரணமாம்.
ஆப்தரட்சகா கன்னத்தில் மெகா ஹிட் படமானதால் சந்தியாவுக்கு நிறைய பட வாய்ப்புகளாம். இதனால் சந்தோஷமடைந்தாலும், நல்ல கேரக்டர்களாக பார்த்து தேர்வு செய்து நடிக்க முடிவு செய்துள்ளாராம் சந்தியா.
தமிழில் எனக்கு மறக்க முடியாத படம் காதல்.அதேபோல கன்னடத்தில் ஆப்தரட்சகா அமைந்துள்ளது. கன்னடத்தில் எனக்கு நல்ல வரவேற்பும், மரியாதையும் கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சி தருகிறது. இருந்தாலும் எனக்கேற்ற நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன் என்கிறார் சந்தியா.
Comments


Click it and Unblock the Notifications