கவர்ச்சிக்கு நோ சொன்ன சோனா!!

ரொம்ப நாளைக்கு முன்பே நடிக்க வந்தவர் சோனா. ஆனால் தோழி, அக்கா என துண்டு துக்கடா வேடங்கள்தான் கிடைத்தன. ஆனால் தனது காஸ்ட்யூமாக அவர் 'துண்டும் துக்கடாவும்' அணிய ஆரம்பித்த பிறகு குத்தாட்ட வாய்ப்புகள் குவிந்தன.
ரஜினியுடன் கூட நடித்துவிட்டேனாக்கும் என நெஞ்சு நிமிர்த்தி கூறிவந்தார்.
இந்த நிலையில், தொழிலதிபர் கம் தயாரிப்பாளர் என புதிய அவதாரமெடுத்தார். சென்னையில் யுனிக் என்ற கடையை பிரமாண்டமாக நடத்தி வரும் அவர், கனிமொழி படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார்.
பார்ட்டிகள், பொது இடங்களில் இவர் காட்டிய கவர்ச்சி ஓவர்டோஸாகி நிரம்பி வழிந்தது. இதனால் சோனா பொது விழாக்களில் கவர்ச்சி உடையில் கலந்து கொள்வதற்கு சமீபத்தில் எதிர்ப்புகள் கிளம்பின.
இதையடுத்து இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், கவர்ச்சி உடைகளில் பொது விழாக்களில் கலந்து கொள்ளவும் மாட்டேன் என்று சோனா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சில படங்களில் மீண்டும் நடிக்க நான் முடிவு செய்திருந்தேன். அவை கவர்ச்சியான வேடங்கள்தான். இதைத் தொடர்ந்து சில இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தன. இனி அவர்களுக்கு அந்தக் கஷ்டம் வேண்டாம். இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குத்துப் பாட்டுக்கும் ஆட மாட்டேன். சங்கீதாவை போல் வலுவான கேரக்டர்களில் நடிப்பேன்.
சினிமா தயாரிப்பாளரானதும் படங்களில் நடிப்பது கஷ்டம் என்று உணர்ந்தேன். அதனால்தான் நடிப்புக்கு இடைவெளி விட்டேன். இப்போது தயாரிப்பாளர் பணியை முடித்து விட்டேன். எனவே தான் மீண்டும் நடிக்க வருகிறேன்...", என்றார்.


Click it and Unblock the Notifications











