தெலுங்குக்குப் போன தனுஷ் நாயகி தபசி

By Sudha

Tapasee and Manchu Manoj Kumar
தனுஷுக்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து வரும் நடிகை தபசி அடுத்து தெலுங்குக்குத் தாவியுள்ளார். இதனால் அனுஷா, இலியானா வகையறாக்களுக்கு சிக்கல் ஏற்படும் என்கிறார்கள்.

டெல்லியைச் சேர்ந்த அழகிய மாடல்தான் இந்த தபசி. அசர வைக்கும் அழகுடன் இருக்கும் தபசி தற்போது தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தெலுங்குத் திரையுலகுக்கும் என்ட்ரி கொடுத்துள்ளார். இயக்குநர் கே.ராகவேந்திர ராவின் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார் தபசி. தபசியுடன் ஜோடி போட்டிருப்பவர் மன்சு மனோஜ். படத்தின் பெயர் ஜும்முந்தி நாடம். படத்தைத் தயாரித்திருப்பவர் மனோஜின் சகோதரி ஸ்ரீலட்சுமி பிரசன்னா.

ஆடுகளத்தை முடித்துக் கொடுத்து விட்டுத்தான் மற்ற தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என தபசியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். எனவே வேறு தமிழ்ப் படத்தில் தபசியால் திறமை காட்ட முடியாத நிலை. எனவேதான் தெலுங்குக்குத் திரும்பியுள்ளார்.

சாப்ட்வேர் என்ஜீனியரான இவர் முதலில் ஆடுகளத்தில் நடிப்பதாகவே இல்லை. ஆனால் முதலில் நடிப்பதாக இருந்த திரிஷா திடீரென ஜகா வாங்கவே இயக்குநர் வெற்றிமாறனும்,தனுஷும் சேர்ந்து தபசியை புக் செய்துவிட்டனர்.

இப்படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வருகிறாராம் தபசி. படப்பிடிப்பு முழுவதும் மதுரையில் வைத்து நடந்துள்ளது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலான கதையாம் இது.

ஈழத்துத் எழுத்தாளரான ஜெயபாலன், கருணாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆடுகளம் வந்தால் தமிழில் தபசியின் மவுசு என்ன என்பது தெரியும். ஆனால் அதற்குள் தெலுங்கு ரசிகர்களுக்கு ஜும்மந்தி மூலம் தபசியை தரிசிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X