மீண்டும் சுறு சுறு எந்திரன்: சென்னை வரும் ஐஸ்வர்யா ராய்!

எந்திரன் படப்பிடிப்பில் பங்கேற்க நாளை மறுநாள் சென்னை வருகிறார் படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய் பச்சன்.
இதுவரை அவர் இல்லாத பகுதிகள்தான் பெரும்பாலும் படமாக்கப்பட்டு வந்தன. காரணம் அப்போது ஐஸ்வர்யா ராய் மணிரத்னத்தின் அசோகவனம் படத்தில் பிஸியாக இருந்தார்.
முழுமையாக அந்தப் படத்தை முடித்துவிட்டே வாருங்கள் என ரஜினி பெருந்தன்மையாகக் கூறிவிட, ஒரே மூச்சில் மணிரத்னம் படத்தின் பெரும்பாலான பகுதிகளை முடித்துக் கொடுத்துவிட்டு வந்துள்ளார் ஐஸ்.
வால்பைறை, குல்லு மணாலி மற்றும் ஹவாய் என உலகம் சுற்றக் கிளம்பிப் போகிறார் எந்திரன். மேலும் சில கிராபிக்ஸ் காட்சிகளுக்காக ஹாலிவுட்டுக்கும் பறக்கவிருக்கிறார்.
'விசா' க்ளியராயிடுச்சில்ல... இனி ரோபோவின் வேகம் டெரா பைட் ஸ்பீட்தான்!' என்று குதூகலிக்கிறார்கள் எந்திரன் யூனிட்காரர்கள்.
Comments


Click it and Unblock the Notifications