தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை அசின்!

இந்தியில் மார்க்கெட் போனாலும், கெத்தை விட்டுக் கொடுக்காத அசின் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாராம்.
வேறு நடிகைகளை தேட தயாரிப்பாளர் முடிவு செய்த போது, விஜய் தலையிட்டு, அசின் கேட்கும் சம்பளத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறிவிட்டதாகத் தெரிகிறது.
சிவகாசி, போக்கிரி என ஹிட் படங்களின் ஜோடி அசின் என்பதால், அந்த ராசி தொடரட்டும் என்று அதே சம்பளத்தை தர தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.
மேலும் 3 இடியட்ஸின் தமிழ் ரீமேக்கிலும் அசின் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் சென்னை வந்திருந்த அசின், பாடிகார்டு ரீமேக் தொடர்பாக அதன் இயக்குநர் மற்றும் ஹீரோவை சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications