'பாமா' விஜயம்!

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன படம் சிந்தாமணி கொலைக்கேஸ். இப்படம் இப்போது தமிழுக்கு வருகிறது. மலையாளத்தில் இயக்கிய ஷாஜி கைலாஷே இப்படத்தையும் தமிழில் ரீமேக் செய்கிறார். படத்துக்கு எல்லாம் அவன் செயல் என பெயரிட்டுள்ளனர்.
ராமகிருஷ்ணா நாயகனாக நடிக்கிரார். அவருக்கு ஜோடியாகிறார் பாமா. பாமா, மலையாளத்தில் புயலைக் கிளப்பி வரும் புதிய நடிகை. நைவேத்யம் என்ற படம் மூலம் பிரபலமானவர்.
எல்லாம் அவன் செயல் மூலம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வருகிறார் பாமா. படத்தில் வில்லனாக நடிப்பவர் பிரகாஷ் ராஜ். மலையாளத்தில் சாய்குமார் செய்த ரோலில் பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ரோஜாவும் இப்படத்தில் வாசம் வீசுகிறார். மலையாளத்தில் வாணி விஸ்வநாத் செய்திருந்த கேரக்டரில் ரோஜா நடிக்கிறார்.
இவர்கள் தவிர விஜயக்குமார், மனோஜ் கே. ஜெயன் ஆகியோரும் படத்தில் உள்ளனராம்.
மலையாளத்தில் இப்படத்தை சற்றே சீரியஸ் மணத்துடன் இயக்கியிருந்த ஷாஜி கைலாஷ், தமிழில் நகைச்சுவையுடன் கூடிய படமாக எடுக்கப் போகிறாராம்.


Click it and Unblock the Notifications











