'அம்மு' பாரதி இன்னும் பிசி!

அம்முவாகிய நான் படம் மூலம் நடிக்க வந்தவர் பாரதி. முதல் படத்திலேயே துணிச்சலான வேடத்தில் நடித்து அசத்தினார். நல்ல நடிகையாக அறியப்பட்ட அவர் அதன் பின்னர் அதிக படங்களில் நடிக்கவில்லை. விக்ராந்த்துடன் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் நடித்திருந்தார்.
பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பாரதி, சமீபத்தில் கிசுகிசுக்கு உள்ளானார். முறைப் பையனான தனது மேலாளர் முருகனை கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டதாக செய்திகள் வெளியாகின.
இனிமேல் தமிழில் பாரதி நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தனது நடிப்பைத் தொடரவுள்ளாராம் பாரதி. தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறாராம் பாரதி.
அதேபோல தமிழிலும் சில பட வாய்ப்புகள் வருகிறதாம். யாருக்கும் பாதகம் இல்லாத படங்களாகப் பார்த்து நடிக்க தீர்மானித்துள்ளாராம் பாரதி.
குடும்ப வாழ்க்கையில் மட்டுமல்லாது திரையுலக வாழ்க்கையிலும் தொடர்ந்து பிசியாகவே இருப்பார் பாரதி என்று அவரது வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











