காதலிக்க நிஜமாகவே நேரமில்லை! - பாவனா

சமீபத்தில் பாவனாவுக்கும், தெலுங்கு இளம் நடிகர் நிதினுக்கும் ரகசியக் கல்யாணம் ஆகி விட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பாவனா எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். தற்போது அதுகுறித்து விளக்கியுள்ளார்.
கொச்சியில் மலையாள ஷூட்டிங்கில் இருந்த அவர் கூறுகையில், என்னை சந்திக்கும் சில பத்திரிகையாளர்கள், 'உங்களைப் பற்றி ஏன் கிசுகிசுக்களே வருவதில்லை?' என்று ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து இப்போது போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நானும் அதை ஜாலியாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எவ்வளவு காலம் இதைத் தாங்கிக் கொள்ள முடியும்? எதற்கும் ஒரு அளவு உள்ளதல்லவா?
முன்பு ஜெயம் ரவியுடனும், தெலுங்கு ஹீரோ கோபி சந்துடனும் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இப்போது என்னையும், தெலுங்கு ஹீரோ நிதினையும் சேர்த்து காதல் கிசுகிசு, ரகசிய கல்யாணம் என்றெல்லாம் வருகிறது.
அது எல்லாமே வதந்திகள்தான். இதுவரை எந்த ஹீரோவையும் நான் காதலித்தது இல்லை. காதலிக்கவும் மாட்டேன்.
தெலுங்கில் நிதின் ஜோடியாக ஹீரோ, மலையாளத்தில் பிருத்விராஜுடன் லாலிபாப், மற்றும் பெயரிடப்படாத புதுப்படம், திலீப்புடன் 'ட்வென்டி ட்வென்டி' படங்களில் நடிக்கிறேன். தமிழில் 'ஜெயம்கொண்டான்' படத்தில் சிறப்பான வேடம். இந்தப் படம் எனக்கு தமிழில் புதிய அடையாளத்தைத் தரும்.
ஒன்றை மட்டும் தெளிவாக எழுதுங்கள். இதுவரை யாரையும் நான் காதலிக்கவில்லை. அப்படி ஒரு எண்ணமும், அதற்கான நேரமும் எனக்கில்லை, என்றார்.
அப்பாடா... (ரசிகர்கள் விடும் நிம்மதிப் பெருமூச்சு கேட்குதா சேச்சி!)


Click it and Unblock the Notifications











