பூமிகாவுக்கு பிறந்த நாள்!

யுவக்குடு படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானவர் பூமிகா. இவரது இயற்பெயர் ரச்சனா சாவ்லா. தமிழில் 2001-ம் ஆண்டு பத்ரி படத்தில் விஜய் ஜோடியாக அறிமுகமானார். தெலுங்கில் குஷி படம் மூலமும் தமிழில் ரோஜாக்கூட்டம் மூலமும் பரபரப்பான நடிகையானார்.
ஆனால் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளோடு நிற்காமல் இந்தியிலும் கால் பதித்தார். தேரே நாம் படத்தில் சல்மான் கான் ஜோடியாக நடித்தார். வசூலில் அந்தப் படம் பட்டையைக் கிளப்பியதால் பாலிவுட் நடிகையாக மாறினார்.
தனது யோகா மாஸ்டரையே காதலித்து கல்யாணமும் செய்து கொண்ட பூமிகா, மீண்டும் தென்னிந்திய மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தங்கர் பச்சான் இயக்கத்தில் களவாடிய பொழுதுகள் படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்து வருகிறார். யாகம் என்ற படத்திலும் நடிக்கிறார்.
நாளை (ஆகஸ்ட் 21) அவருக்கு 31 வது பிறந்த நாள் விழா.
Comments


Click it and Unblock the Notifications