உதவியாளர் மாயம்-அசினை விசாரிக்க போலீஸ் குழு விரைகிறது

By Staff

Asin with Nalla Muthu Kumar
உதவியாளர் நல்லமுத்துக்குமார் காணாமல் போன விவகாரம் தொடர்பாக நடிகை அசினிடம் விசாரணை நடத்த சென்னை போலீஸ் குழு மும்பை விரைகிறது.

சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் சுடலை வடிவு. இவர் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது மகன் நல்லமுத்துக்குமார் முன்பு நடிகர் விஜய்யிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.

போக்கிரி படத்தில் நடித்தபோது அவரது செயல் பிடித்துப் போகவே நடிகை அசின் எனது மகனை தனது உதவியாளராக வைத்துக் கொண்டார்.

எங்கு சென்றாலும் கூடவே அழைத்துச் செல்வார். அவரது அனைத்து அந்தரங்கங்களும் எனது மகனுக்குத் தெரியும் என்பதால் யாருடனும் பேச விட மாட்டார். என்னுடன் மட்டும் போனில் பேசுவான் முத்துக்குமார்.

இந்த நிலையில் திடீரென அவனுக்கு விபத்து ஏற்பட்டது. இதையடுத்து முன்பு போல எனது மகனை அசினும், அவரது தந்தையும் நடத்தாமல் அடிக்கடி திட்டி சித்திரவதை செய்துள்ளனர். இதை எனது மகன் என்னிடம் சொல்லி அழுவான்.

இந்த நிலையில் அவனைக் காணவில்லை. அனைத்து ரகசியங்களும் அவனுக்குத் தெரியும் என்பதால் எனது மகனை அசினும், அவரது தந்தையும் கடத்தி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.

எனது மகனை மீட்டுத் தர வேண்டும் என்று புகாரில் கூறியிருக்கிறார் சுடலைவடிவு.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு செங்குன்றம் போலீசாருக்கு கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார். அதன்படி செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் அசினின் தந்தை ஜோசப்பிடம் செல்போன் மூலம் பேசினார்.

இதையடுத்து அசினிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதற்காக தனிப்படை போலீஸார் மும்பை செல்லவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X