இயக்குநராகிறார் கீது மோகன்தாஸ்

பொம்முக்குட்டி அம்மாவுக்குப் படத்தில் குட்டிப் பெண்ணாக வந்தவர் கீது மோகன்தாஸ். கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான நள தமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது தமிழில் சுத்தமாக ஒரு படமும் இல்லை கீதுவுக்கு. ஆனால் மலையாளத்தில் அவ்வப்போது தலை காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இயக்குநராக புது அவதாரம் எடுத்துள்ளார் கீது மோகன்தாஸ்.
அவரது முதல் படமே ஒரு குறும்படம்தான். கேள்க்குண்டோ என்ற பெயரில் உருவாகியுள்ள அந்தப் படம் ஒரு பார்வையற்ற சிறுமியின் துயரங்களை விளக்கும் படமாகும்.
22 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தில், கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுமி ஹஸனா நடித்துள்ளாள்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து இந்தியில் தனது முதல் படத்தை இயக்கவுள்ளார் கீது. இதுகுறித்து கீது கூறுகையில், முதலில் இந்த இந்திப் படத்தைத்தான் இயக்குவதாக இருந்தது. கொங்கனா சென் சர்மாவை நாயகியாக அணுகியிருந்தோம். கதை உள்பட அனைத்தும் தயார். ஆனால் நல்ல தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.
இதனால் இந்தியை ஒத்தி வைத்து விட்டு குறும்படத்தை இயக்கினேன். இறுப்பினும் விரைவில் எனது இயக்கத்தில் முதல் இந்திப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றார் கீது.


Click it and Unblock the Notifications











