'ஆராதனா'... வாணிஸ்ரீ வேடம்-தேவயானியின் ஆசை!

'ஆராதனா' படத்தில் வாணிஸ்ரீயா... என்ன கொடுமை இது? என்கிறீர்களா...
'ஆராதனா' ஒரிஜினல் இந்திப் படத்தில் அவர் நடிக்கவில்லை. ஆனால் அந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்ட போது அதில் நடித்தவர் வாணிஸ்ரீ.
சமீபத்தில் ஒரு படத்தில் நடிகை தேவயானி அம்மா வேடத்தில் நடிப்பதாக செய்தி வெளியாக, கொதித்துவிட்டார் தேவயானி.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
அம்மா வேடங்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இப்போது எனக்கு அம்மா வேடத்தில் நடிக்கிற வயசா சொல்லுங்க...
மதர் இந்தியா படத்தை திரும்ப எடுத்தால், அதில் சத்யராஜுக்குக் கூட அம்மாவாக நடிப்பேன். அல்லது ஆராதனா படத்தில் வாணிஸ்ரீ செய்திருப்பாரே அந்த மாதிரி வேடம் என்றாலும் நடிப்பேன்.
எந்தக் கதையும் எனக்குப் பிடித்தமாதிரி இருந்தால்தான் நடிப்பேன்.
நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான்தான் எதையும் தேர்ந்தெடுத்து ஒப்புக் கொள்கிறேன்.
சமீபத்தில் கூட சுரேஷ் கோபியுடன் ஒரு மலையாளப்பட வாய்ப்பு வந்தது. அதை வேண்டாம் என்று கூறிவிட்டேன் தெரியுமா... என்றார்.


Click it and Unblock the Notifications











