காஜல் தலையில் பாய்ந்த வாள்!

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமாகி, அது வருவதற்கு முன்பே பரத்துடன் பழனி படத்தில் நடித்து முடித்து வெளியாகி பிரபலமாகியவர் காஜல் அகர்வால்.
தற்போது சரண் இயக்கத்தில் மோதி விளையாடு என்கிற புதிய படத்தில் நடிக்கிறார் காஜல். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் வினய்.
நேற்று இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்தது. அப்போது, சீன நாட்டு உடையில் வாள் சண்டை போட்டு ஆடிப் பாடுவது போல வினய்யும், காஜலும் நடித்தனர்.
அப்போது வினய், காஜலின் தலையில் கத்தியை வைக்க வேண்டும். அப்படி வைத்தபோது வாளின் நுனிப் பகுதி, காஜல் தலையின் பின் பகுதியில் குத்தி விட்டது. இதையடுத்து தலையிலிருந்து குபுகுபுவென ரத்தம் கொட்டத் தொடங்கியது.
உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. காஜலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது தலையைப் பரிசோதித்த டாக்டர்கள் நான்கு தையல்கள் போட்டு ரத்தக்கசிவை நிறுத்தினர்.
காஜல் தலையில் வாள் பாய்ந்ததால் படப்பிடிப்புத் தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக தனது பிறந்த நாளையொட்டி படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார் காஜல். அதன் பின்னர்தான் வாள் பாய்ந்த விபரீதம்ஏற்பட்டு விட்டது.


Click it and Unblock the Notifications











