பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்தால் திருமணத்துக்கு ரெடி! - காஜல்

இந்தியிலும் அங்கீகாரம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் மிதக்கும் காஜல் அகர்வால் சமீபத்தில் ஹைதராபாதில் அளித்த பேட்டி:
சிங்கம் படம் இந்தியில் நன்றாகப் போவது மகிழ்ச்சி. இப்போது நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறேன். படம் வென்றதா, தோற்றதா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை.
காதல் என்பது முதல் பார்வையிலேயே வரும் என்கின்றனர். இதை நான் நம்பவில்லை. இருவருக்கிடையில் காதல் மலர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
இருவரின் எண்ணங்கள், ஆசைகள் பற்றி அறிய வேண்டும். அதன்பிறகு படிப்படியாக நெருக்கம் காட்டி பழகுவார்கள். காதலும் வரும்.
என்னை பொறுத்தவரை எனக்கு காதலிக்க நேரம் இல்லை. பிசியாக நடிப்பதால் அதை சிந்திக்கவில்லை. என்னைமுழுமையாக புரிந்து கொண்ட பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்தால் உடனே திருமணம் செய்து கொள்வேன்," என்றார்.
Comments


Click it and Unblock the Notifications