தெலுங்கு ரீமேக்கில் கஜோல்

தெலுங்கில் ஹிட் படங்களான அருந்ததி, பொம்மரிலு, கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் ஆகியவை இந்திக்கு போயுள்ளன. இந்த வரிசையி்ல் அடுத்து அனுசுயா இணைகிறது.
இந்த ரீமேக்கில் கஜோல் நாயகியாக நடிப்பார் எனத் தெரிகிறது.
அனுசுயா ஒரு திரில்லர் படமாகும். பூமிகா நாயகியாக நடித்திருந்தார். புலனாய்வு நிருபராக வந்த அவர் நகரில் நடைபெறும் தொடர் கொலைகள் குறித்து துப்பறிகிறார்.
இந்தப் படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் நடிக்க கஜோல் ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து தயாரிப்புத் தரப்புக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், கஜோல் தற்போது மை நேம் இஸ் கான் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். அவர் திரும்பி வந்தவுடன் இந்தப் படம் குறித்த விவரங்கள் முடிவாகும் என்றனர்.
அனுசுயாவின் தெலுங்குப் பதிப்பை இயக்கியவரும், சீரியர் கில்லராக படத்தின் நாயகனாக நடித்தவருமான ரவி பாபுவே இந்திப் படத்தையும் இயக்கக் கூடும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











