செண்பகா என்கிற கங்கனா!

By Staff

Kangana Ranaut
தாம் தூம் வந்த பிறகு கங்கனாவின் பெயர் செண்பகா என நிரந்தரமாக மாறிப் போனாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு படத்தில் அதகளம் செய்திருக்கிறாராம் கங்கனா.

பாலிவுட் புயல் கங்கனா ரனவத், தமிழுக்கு முதல் முறையாக வந்துள்ள படம்தான் தாம் தூம். ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ள கங்கனா, இப்படத்தில் செண்பகா என்ற கேரக்டரில் அசத்தியுள்ளார்.

அல்ட்ரா மாடர்ன் மும்பைப் பெண்ணான கங்கனா, இப்படத்தில் பாவாடை, தாவணியில் அச்சு அசல் தமிழ்நாட்டு கிராமத்துப் பெண்ணாக வந்து கிறங்கடித்துள்ளார்.

செண்பகா ரோல் குறித்து கேட்டால் படு ஆர்வமாக பேசுகிறார் கங்கனா. இது அருமையான ரோல். ஜீவா சாருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். எனக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும் வகையில் இந்த ரோல் அமைந்துள்ளது.

செண்பகா என்ற கேரக்டர் சுத்தமான கிராமத்துப் பெண் கதாபாத்திரம். செண்பகா என்ற பெயர் எனக்கு ரொம்பவே பிடித்துப் போய் விட்டது. இப்போதெல்லாம் என்னை நான் செண்பகா என்றுதான் கூப்பிட்டுக் கொள்கிறேன். நான் மட்டுமல்ல இனிமேல் எல்லோருமே என்னை செண்பகா என்றுதான் கூப்பிடப் போகிறார்கள். அப்படி ஒரு கேரக்டர் அது.

ஸ்டாப், ஸ்டாப், ஜெயம் ரவி பத்தி சொல்லுங்களேன் என்று 'மேட்டரைப்' பிடிக்க முயற்சித்தோம். உற்சாகமான கங்கனா, ரவி ஒரு ஜென்டில்மேன். மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்தைப் பார்த்தேன். அவரது நடிப்பு அபாரமாக இருந்தது. நிச்சயம் இப்படம் பெரும் ஹிட் ஆகும்.

ரவி நடித்த ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி ஆகிய படங்களையும் பார்த்துள்ளேன். அவையும் என்னை வெகுவாக கவர்ந்தன என்றார் கங்கனா.

தமிழில் நிறைய நடிக்க விரும்புகிறேன். இங்குள்ளவர்கள் மிகவும் தொழில்முறையாக இருக்கிறார்கள். தொழில் பக்தி அதிகம் உள்ளது. சரியான நேரத்திற்கு வேலைக்கு வந்து, சரியான நேரத்திற்கு வேலையை முடிக்கின்றனர்.

மும்பை சினிமாவுக்கும், கோலிவுட்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. கோலிவுட்டில் பணியாற்றுவது எனக்குப் பிடித்துள்ளது. வேறு எங்கும் விட இங்கு மிகவும் சவுகரியமாகவும் இருக்கிறது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X