மர்லின் மன்றோவாக கரீனா?

உலக சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகை மர்லின் மன்றோ. 1947 முதல் 1962 வரை அவர்தான் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தார்.
ஆனால் தனது 36-வது வயதில் அவர் மர்மமாக மரணம் அடைந்தார். இது கொலையா தற்கொலையா எனும் விவாதம் இப்போதும் தொடர்கிறது.
மூன்று பேரை திருமணம் செய்து விவாகரத்தும் செய்த மர்லின் மன்றோவுக்கு அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடியுடனும் தொடர்பிருந்தது.
பரபரப்பான திருப்பங்கள், சுவாரஸ்யமான நிகழ்வுகள், மர்ம முடிச்சுகள் நிறைந்த மர்லின் மன்றோ வாழ்க்கையை திரைப்படமாக்குகிறார் இந்தி இயக்குநர் மதுர் பண்டார்கர்.
இதில் மர்லின் மன்றோ வேடத்தில் கரீனா கபூரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. ஆனால் அவர் பெரும் சம்பளம் கேட்கபதால் சற்று இழுத்துக் கொண்டிருக்கிறது விவகாரம். இதில் சில அரை, முக்கால் நிர்வாணக் காட்சிகள் உள்ளதால்தான் இந்த தொகை என்று கரீனா தரப்பில் கூறுகிறார்கள்.
இதுபற்றி இயக்குனர் மதுர் பண்டார்கர் கூறுகையில், 'கரீனா கபூர் இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாலும், அவர் கேட்கும் சம்பளம் மிரள வைக்கிறது. ஆனால் கரீனா நடித்தால் சரியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து பேசி வருகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











