கருணாஸுக்கு கார்த்திகா

மலையாளத்திலிருந்து வந்த இனிய வரவுதான் கார்த்திகா. சரத்குமாருடன் நம் நாடு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். அதன் பின்னர் அவரைக் காணவில்லை.
இந்த நிலையில், பெரிய இடைவெளிக்குப் பிறகு கார்த்திகா மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இம்முறை அவர் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள காமெடியன் கருணாஸுடன் ஜோடி போடுகிறார்.
மலையாளத்தில் வெளியாகி ஹிட் ஆன வடக்கு நோக்கி எந்திரம் படத்தை தமிழில் திண்டுக்கல் சாரதி என்ற பெயரில் ரீமேக்செய்கிறார் கருணாஸ். படத்தில் அவர்தான் ஹீரோ. அவருக்குஜோடியாக கார்த்திகா நடிக்கிறார்.
ஈகோ பிடித்த கணவர் வேடம் கருணாஸுக்கு. நாம் அழகாக இல்லையே, ஆனால் நமது மனைவி அபரிமிதமான அழகோடு இருக்கிறாளே என்ற பொறாமையில் பொங்கிப் பொசுங்கும் கணவன் கதாபாத்திரம்
கருணாஸுக்கு. மேலும், மனைவி மீது சந்தேகமும் வருகிறது.
சத்தம் போடாமல் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுவென நடந்து வருகிறதாம். இப்படத்தில் கருணாஸை விட கார்த்திகாவுக்கே நடிக்க நல்ல வாய்ப்பாம். இதனால்தான் கருணாஸுக்கு ஜோடி என்றதும், கொஞ்சம் கூட தயங்காமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
சிவசண்முகம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை மிகுந்த கவனத்துடன உருவாக்கி வருகிறார் கருணாஸ்.


Click it and Unblock the Notifications











