வாடா வதந்தி - கிரண் மறுப்பு

வெங்கடேஷ் இயக்கத்தில் சுந்தர்.சி நடிக்கும் படம் 'வாடா'. இந்தப் படத்தில் ஷெரில் பிண்டோ நாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக கிரண் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென இந்தப் படத்திலிருந்து கிரண் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து கிரண் கூறியிருப்பதாவது:
வாடா படத்திலிருந்து என்னை யாரும் நீக்கவில்லை. யார் இப்படி ஒரு செய்தியை கிளப்பி விட்டார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. கதை கேட்டுப் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கிறேன். அதுவும் காட்சி பிடித்திருந்தால்தான் நடிக்கிறேன்.
அப்படியிருக்கும்போது என்னை ஏன் நீக்க போகிறார்கள்?
இந்தப் படத்தை அடுத்து நாளை நமதே, சரத் குமாருடன் ஜக்குபாய், லாரன்சுடன் ராஜாதி ராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இத்தனைப் படங்களில் நான் நடிப்பது பிடிக்காமல் யாரோ வதந்திகளைப் பரப்புகிறார்கள்.
அடுத்த மாதம் நான் நடிக்கும் இந்தி படமும் தொடங்குகிறது. வேறு மொழிகளில் நடித்தாலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். இதுதான் எனக்கு தாய்வீடு மாதிரி, என்றார் கிரண்.
அப்பாடா... இப்பதான் தமிழனுக்கு நிம்மதியாச்சு!


Click it and Unblock the Notifications











