லக்ஷனாவின் புதுப் படம்

தமிழில் அறிமுகமான லக்ஷனா தற்போது டோலிவுட்டில் கொடி நாட்ட கடுமையாக முயன்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பிடித்தமான கேரக்டருடன் கூடிய படம் ஒன்று கிடைத்துள்ளதாம்.
நடிகை சிவரஞ்சனியின் கணவரும், தெலுங்கு நடிகருமான ஸ்ரீஹரியின் மைத்துனருமான ஜெயராம் இப்படத்தின் ஹீரோவாக நடிக்கவுள்ளார். லக்ஷனாதான் ஹீரோயின்.
இப்படம் கல்விக் கொள்ளையை தோலுரிக்கும் டிப்பிக்கல் தெலுங்குப் படம். படத்தில் லக்ஷனாவுக்கு சூப்பர் கேரக்டராம். இது எனது கனவு கேரக்டர். கதையைக் கேட்டவுடனேயே நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்படத்தில் நடிக்க ஆவலோடு உள்ளேன். தெலுங்கில் இது எனக்கு நல்ல பிரேக்கைக் கொடுக்கும் என்கிறார் லக்ஷனா.
இப்படத்தை ஏ.எல்.ராஜா இயக்குகிறார். பூபதி தயாரிக்கிறார்.
லக்ஷனாவை தமிழ் விட்டால் என்ன, தெலுங்கு திவ்யம் தந்தால் சரிதான்.
Comments


Click it and Unblock the Notifications