பாஜகவில் சேரத் திட்டமா? மறுக்கிறார் நக்மா!

காங்கிரசில் சீட் தராத கோபத்தில் நடிகை நக்மா பா.ஜனதா கட்சியில் சேரப்போகிறார் என்றும், மும்பை வடக்கு மத்திய தொகுதியில் நடிகர் சஞ்சய்தத்தின் சகோதரியான காங்கிரசை சேர்ந்த பிரியாவை எதிர்த்து போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இந்தத் தகவல்களை அடியோடு மறுத்துள்ளார் நக்மா. இதுகுறித்து நேற்று அவர் கூறுகையில், "அந்த தகவல்களில் உண்மை எதுவும் கிடையாது. பாஜகவினர் யாருடனும் நான் பேசவில்லை. பரம்பரையாகவே நான் ஒரு காங்கிரஸ் தொண்டர். கட்சியின் தலைவர் சோனியா மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். மும்பை வடமேற்கு தொகுதியில் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக நான் ஜெயித்து காட்டுவேன்" என்றார்.
வட மாநில மக்கள் அதிகமாக வசிக்கும் மும்பை வடமேற்கு தொகுதியில் போட்டியிட மேலும் சில காங்கிரஸ் தலைவர்களும் தீவிரம் காட்டி வரும் நிலையில் எப்படியாவது அந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்று விட முயன்று வருகிறார் நக்மா. இதற்காக சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்தித்தார்.
தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறும், நிச்சயம் வெற்றி பெற்றுக் காட்டுவேன் என்றும் அவர் சோனியா காந்தியிடம் கேட்டுக் கொண்டாராம்.
மறுத்தாலும் பிரச்சாரம்:
ஒருவேளை தேர்தலில் போட்டியிட மேலிடம் டிக்கெட் தர மறுத்தால் என்ன செய்வீர்கள் என்று நக்மாவிடம் கேட்கப்பட்டது.
உடனே அவர், " நான் கடந்த 7 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து வருகிறேன். கட்சி கட்டளைக்குக் கட்டுப்படுவேன். எனக்கு க்ளீன் இமேஜ் உள்ளது. வாய்ப்புக் கொடுத்தால் ஜெயித்துக் காட்டுவேன். வாய்ப்புத் தராவிட்டால் காங்கிரஸ் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொள்வேன், என்றார் நக்மா!


Click it and Unblock the Notifications











