ஆர்யாவுடன் சேரும் நயன்!

இந்தப் படத்தில் பாஸ்கரனாக நடிப்பவர் நான் கடவுள் நாயகன் ஆர்யா. அவருக்கு ஜோடி நயன்தாரா. தமிழில் புதிய படங்கள் எதுவுமின்றி இருந்த நயன்தாராவுக்கு இப்போது கிடைத்துள்ள ஒரே வாய்ப்பு இதுதான்.
ரொமான்டிக் காமெடியான இந்தப் படத்தை இயக்குபவர் 'சிவா மனசுல சக்தி' படத்தை இயக்கிய ராஜேஷ்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மற்ற நடிக நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
ஆர்யாவும் நயன்தாராவும் ஏற்கெனவே ஷ்யாமாபிரசாத் இயக்கும் ஒரு மலையாளப் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, புதிய வாய்ப்புகள் இல்லாததால் தமிழில் தனது சம்பளத்தை கணிசமாகக் குறைத்திருக்கிறார் நயன்தாரா என்ற செய்தியை தயாரிப்பாளர்களுக்கு சொல்லி வருகிறார்களாம் அவரது அடிப்பொடிகள்.


Click it and Unblock the Notifications











