ஸ்ரேயாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் உத்தரவு!

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தை தயாரித்தவர் கதிரேசன். வெற்றிமாறன் டைரக்டு செய்த இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.
இதையடுத்து தனுஷ்-ஸ்ரேயா ஜோடியை வைத்து, வெற்றிமாறன் இயக்கத்தில் இன்னொரு படம் தயாரிக்க தயாரிப்பாளர் கதிரேசன் திட்டமிட்டார். இதற்காக, ஸ்ரேயாவுக்கு முன்பணமும் கொடுத்திருந்தார்.
ஆனால் சமீபத்தில் சென்னை வந்த ஸ்ரேயா திடீரென்று வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிடுவதாக தயாரிப்பாளரிடம் தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி படங்களிலும் பிஸியாக இருப்பதால், இந்தப் படத்தில் நடிக்க முடியாது. நீங்கள் கொடுத்த முன்பணத்தை திருப்பி வாங்கிக்கொள்ளுங்கள், கதிரேசனிடம் கூறிவிட்டாராம் ஸ்ரேயா.
ஆனால் கதிரேசன் அந்தத் தொகையை வாங்க மறுத்து விட்டார். என் படத்தில் நீங்கள்தான் கதாநாயகி. தனுஷ் ஜோடியாக நீங்கள்தான் நடிக்க வேண்டும், என்று அவர் உறிதியாகக் கூறிவிட்டாராம்.
இதைத் தொடர்ந்து கதிரேசன் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை நடிகர் சங்க செயலாளர் ராதாரவியிடம் ஒப்படைத்து, படத்திலிருந்து தான் விலகிக் கொண்டதை உறுதிப்படுத்தினார்.
தயாரிப்பாளர் கவுன்சில் தலையீடு!
ஆனால் கதிரேசன், பிரச்சினையை தயாரிப்பாளர் கவுன்சிலுக்குக் கொண்டு போய்விட்டார்.
நான் தயாரிக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க மறுக்கும் ஸ்ரேயா, ஜெமினி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் மட்டும் அதே தனுஷுக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்து இருக்கிறார். பாரபட்சம் பார்க்காமல் ஸ்ரேயா, என் படத்திலும் நடித்து முடித்துக்கொடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும், என புகார் கொடுத்தார்.
இந்த புகார் மீதான விசாரணை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் நடந்தது. ஜெமினி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டு, கதிரேசன் தயாரிக்கும் படத்திலும் ஸ்ரேயா நடித்து முடிக்க வேண்டும், என்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் ஸ்ரேயாவோ, இப்போதைக்கு ஜக்குபாய், மர்மயோகி மற்றும் கந்தசாமி படங்களில் மட்டுமே நடித்து வருவதாகக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











