வந்துருச்சு திரிஷா சீசன்!

By Staff

Trisha
இந்த ஆண்டு கோடைகாலம் திரிஷாவின் காலமாக மாறியுள்ளது. காரணம், இந்த கோடை விடுமுறையில் திரிஷா நடித்துள்ள 3 படங்கள் தமிழிலும், தெலுங்கிலும் ரிலீஸாகின்றன.

விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள குருவி, ராதாமோகனின் இயக்கத்தில் உருவாகியுள்ள அபியும் நானும், தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவாகியுள்ள புஜ்ஜிகாடு ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

தரணியின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் திரிஷா நடித்துள்ள குருவி அவருக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 1ம் தேதி உலகெங்கும் குருவி ரிலீஸாகிறது.

அபியும் நானும் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு மகளாக நடித்துள்ளார் திரிஷா. இதில் திரிஷா கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம். எனவே இப்படத்தையும் அதிகம் எதிர்பார்த்துள்ளார் திரிஷா.

தெலுங்கு இளம் நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடித்துள்ள புஜ்ஜிகாடு படத்தையும் திரிஷா வெகுவாக எதிர்பார்த்துள்ளார்.

தங்களது தலைவியின் 3 படங்கள் அடுத்தடுத்து வரவுள்ளதால் திரிஷா ரசிகர் மன்றம் தடபுடலாக அவற்றை வரவேற்க தயாராகி வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X