கேப்டனுடன் மீண்டும் ஷெரில்

விஜயகாந்த்தின் 150வது படமான அரசாங்கத்தில், இளம் கனடா போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார் ஷெரில். படத்தின் பிரதான நாயகியான நவ்னீத் கெளரை விட ஷெரிலுக்குத்தான் கிளாமரிலும், நடிப்பிலும் அதிக வாய்ப்பு இருந்தது. இதனால் கெளரை ஓரம் கட்டியிருந்தார் ஷெரில்.
மேலும் நவ்னீத்தை விட ஷெரிலின் ஒத்துழைப்பும், ஈடுபாடும் விஜயகாந்த்தைக் கவர்ந்து விடவே, அவரையே தனது அடுத்த படமான எங்கள் ஆசானின் நாயகியாக்கி விட்டார் விஜயகாந்த்.
எங்கள் ஆசானில் நகராட்சித் தலைவி வேடத்தில் கலக்கலாக வருகிறார் ஷெரில். முதல் படத்தில் படு மாடர்ன் ஆக வந்து போன ஷெரில், இப்படத்தில் புடவையில் படு கெத்தாக வரப் போகிறார்.
எங்கள் ஆசானில் நடிப்பது குறித்து ஷெரில் கூறுகையில், எனது ரோல் மிகவும் சுவாரஸ்யமானது. முதல் படத்தில் நடித்ததற்கு முற்றிலும் நேர் மாறாக இதில் நடிக்கப் போகிறேன்.
ஒரு அப்பாவி கிராமத்துப் பெண் எப்படி அரசியலில் நுழைந்து, சக்தி வாய்ந்த பெண்மணியாக மாறுகிறார் என்பதுதான் எனது கேரக்டரின் சாராம்சம் என்கிறார் ஷெரில்.
ஷெரிலுக்கே இப்படி பவர்புல் கேரக்டர் என்றால் கேப்டனுக்கு சொல்லவா வேண்டும். இதுவரை நடித்திராத அளவுக்கு படு வித்தியாசமான கேரக்டரில் தலைவர் கலக்கப் போகிறாராம்.


Click it and Unblock the Notifications











