நடிகை ஷ்ரியா திரு்பபதி கோவிலில் சாமி கும்பிட்டார்

தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதிக்கு வந்த ஷ்ரியா, திருமலையில் இரவு தங்கினார்.
பின்னர் நேற்று அதிகாலையில், நடந்த சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். சிறப்பு அபிஷேகம் செய்த ஷ்ரியாவுக்கு கோவில் நிர்வாகிகள் பிரசாதம் அளித்தனர்.
தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்த ஷ்ரியாவை அந்த நேரத்திலும் ஏராளமான ரசிகர்கள் முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் புன்னகையுடன் பேசிய ஷ்ரியா, ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். பின்னர் காரில் ஏறி கிளம்பிச் சென்றார்.
Comments


Click it and Unblock the Notifications