சிம்ரனுக்கு 2வது ஆண்குழந்தை!

சிம்ரனுக்கும் மும்பையைச் சேர்ந்த தீபக்கும் கடந்த 2003-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அதீப் என்ற ஐந்து வயது மகன் இருக்கிறான்.
ஆரம்பத்தில் டெல்லியில் வசித்த சிம்ரன், இப்போது குடும்பத்துடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் புதிதாக கட்டியுள்ள பங்களாவில் வசித்து வருகிறார்.
அவர் மீண்டும் கர்ப்பமாக இருந்தார். நேற்று சிம்ரனுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனை ஊழியர்களுக்கு கணவர் தீபக், மானேஜர் முனுசாமி ஆகியோர் இனிப்பு வழங்கினார்கள்.
Comments


Click it and Unblock the Notifications