சிந்துரா, பூமிகா, ஸ்னேகா...

2005ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியி்ல் முதல் ரன்னர் அப் ஆனவர் ஆந்திரத்து அழகுக் குயில் சிந்துரா கட்டே. அதன் பின்னர் தெலுங்குத் திரையுலகில் புகுந்தார். அவர் முதன் முறையாக ஹீரோயினாக நடித்த சங்கமம் பெரும் பிளாப் படமானது.
இதனால் நடிப்பிலிருந்து விலகினார் சிந்துரா. அதன் பிறகு அவர் குறித்த செய்தியே இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் சிந்துரா நடிக்க வந்துள்ளார்.
முன்பை விட பொலிவாகவும், அழகாகவும், ஒயிலாகவும் காணப்படும் சிந்துரா, அமராவதி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் இதில் சிந்துரா மட்டும் நாயகி அல்ல. அவருடன் பூமிகா, ஸ்னேகா ஆகியோரும் நாயகிகளாக உள்ளனர். இருப்பினும் சிந்துராவுக்குத்தான் முக்கிய ரோல் என்று கூறுகிறார்கள்.
இந்தப் படமாவது சிந்துராவுக்குப் பிரேக் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Comments
சிந்துரா கட்டே டோலிவுட் பூமிகா மிஸ் இந்தியா 2005 ஸ்னேகா bhumika miss india 2005 sindhura gadde sneha tollywood


Click it and Unblock the Notifications