ஸ்னேகா... புன்னகைக்குப் பின்னால் பல புதிர்கள்!

பெரிய படங்களோ, வெற்றிகளோ இல்லாவிட்டாலும் இந்த அளவு முக்கியத்துவத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்வது சாதாரண விஷயமா என்ன?.
ராகவேந்திரா என்ற நபர் யாரென்றே தனக்குத் தெரியாது என ஸ்னேகா கூறினாலும், அதில் உண்மையில்லை என்கிறது போலீஸ் தரப்பு. காரணம் பல முறை ஸ்னேகாவை ஒரு தயாரிப்பாளர் என்ற போர்வையில் சந்தித்துள்ளார் ராகவேந்திரா. ஸ்னேகாவின் தந்தைக்கும் இந்த ராகவேந்திராவை நன்கு தெரியுமாம்.
ஸ்னேகாவிடம் தன்னை ஒரு பெரிய தயாரிப்பாளராகக் காட்டிக் கொள்ள ஏராளமான பரிசுகளை வாங்கிக் கொடுத்ததாக ராகவேந்திரா போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும் அவரை தன் வழிக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த ஸ்னேகாவுக்கு நெருக்கமான ஒரு பெண்மணியிடமும் பல லட்சம் ரூபாய் பெறுமான பரிசுகளை ஸ்னேகாவுக்காக வாங்கிக் கொடுத்துள்ளார் ராகவேந்திரா.
இவை எதையும் தான் பெற்றுக் கொள்ளவில்லை என்று ஸ்னேகா கூறினாலும், தனக்காக ராகவேந்திரா இதையெல்லாம் செய்கிறார் என தெரிந்தும் ஆரம்பத்திலேயே இதை முடிவுக்கு கொண்டுவராமல், ஒவ்வொரு முறை ராகவேந்திரா சந்திக்க வந்தபோதும் ஸ்னேகா அவரைச் சந்தித்துள்ளதாக போலீசார் இப்போது 'யு டர்ன்' அடித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் போலீசார் ஒரே பக்கமாக விசாரிக்கக் கூடாது என ராகவேந்திரா தரப்பில் கோரப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











