பாவனாவின் தமிழ் ஏக்கம்

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து, அப்படியே தெலுங்கிலும் நடித்து இப்போது கன்னடத்தில் பிசியாகியிருக்கிறார் பாவனா.
தமிழில் இவர் பிரபல நடிகையாக மாறினாலும் கூட ஸ்டார் நடிகையாக மாற முடியாமல் போய் விட்டது. சக நடிகைகளுடன் நடந்த போட்டியில் பாவனா ஓரம் கட்டப்பட்டு விட்டார். ஆரம்பத்தில் கவர்ச்சிகரமாக நடிக்க மறுத்ததால் பல வாய்ப்புகளை இவர் தவற விட நேரிட்டது. பின்னர் கவர்ச்சிக்கும் தயார் என்று கூறியபோது எல்லாம் கை மீறிப் போயிருந்தது.
சமீபத்தில் கன்னடத்திற்குள் புகுந்தார் பாவனா. புனீத் ராஜ்குமாருடன் அவர் நடித்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் இப்போது பாவனா கன்னடத்தில் பிசியாகி விட்டார். இருந்தாலும் அனைத்துப் பட வாய்ப்புகளையும் ஏற்காமல் 2 படங்களை மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளாராம்.
கன்னடத்தில் நிறையப் பட வாய்ப்புகள் வந்தாலும் கூட தமிழ் சினிமா ஞாபகமாகவே இருக்கிறாராம் பாவனா. நிச்சயம் தமிழ் சினிமாவில் நான் எனது முத்திரையைப் பதிப்பேன், மீண்டும் அங்கு பிசியாக நடிப்பேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் நம்பிக்கையுடன் கூறுகிறாராம். நல்ல தமிழ்ப் படத்துக்காகவும் காத்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











