தேஜாஸ்ரீக்கு காதல் 'ஜூர்ரம்'

By Staff

Tejashree
பின்னிரவு நேரம்... மினுக்கும் திருவிழா விளக்குகள்... நடுவே ஒரு கூத்து மேடை. அதில் 'ஜூர்ரம் வந்திடுச்சு... மாமா ஜூர்ரம் வந்துடுச்சி...' என குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார் ஒரு பெண். தெரிந்த முகமாயிருக்கிறதே என உற்றுப் பார்த்தால், அட... தேஜாஸ்ரீ!

சின்னவீடா வரட்டுமா... என்று சிணுங்கலாகக் கேட்டு இளசுகளை இம்சை பண்ணிய அதே தேஜாஸ்ரீதான், சின்ன இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கோலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார்.

ஒற்றன் படத்தில் அந்த ஒற்றைப் பாடலுக்கு நடனமாட வைத்து தேஜாஸ்ரீக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்த இளங்கண்ணன்தான் மீண்டும் அவரை அழைத்து வந்திருக்கிறார்.

இந்தப் புதுப்படத்தின் தலைப்பு 'காதல்னா சும்மா இல்ல'.

தெலுங்கில் ஹிட் படமான கம்மியம் படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் ஆர்ட் டைரக்டர் ஜி.கே. அச்சு அசலாகப் போட்டிருந்த கிராமத்து திருவிழா செட்டில் நடந்தது.

படப்பிடிப்புக்கு நடுவே தேஜாஸ்ரீ கூறியதாவது:

இனிமேல் ஒரு பாடலுக்கு நடனமாடக் கூடாது என்றுதான் வைராக்கியத்துடன் இருந்தேன். ஆனால் இளங்கண்ண்ணனுக்காக அதைத் தளர்த்திக் கொண்டேன்.

இந்தப் படத்தில், வெறும் பாடல் மட்டுமல்ல, சில காட்சிகளிலும் வரும் அளவுக்கு சற்று பெரிய ரோல்தான். ஆனால் இனிவரும் படங்களில் ஒற்றைப் பாடல் நடனமெல்லாம் கிடையாது என்றார் தேஜாஸ்ரீ.

இந்தப் படத்தில் இரு நாயகர்கள். ஒருவர் ரவிகிருஷ்ணா, மற்றவர் தெலுங்கு நடிகர் சர்வானந்த். கமலினி முகர்ஜியும், தேஜாஸ்ரீயும் நாயகிகள்.

ஆட்டோகிராப், 7ஜி ரெயின்போ காலனி, காதல் மாதிரி இந்தப் படம் மிகப்பெரிய ட்ரெண்ட் செட்டராக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் ரவிகிருஷ்ணா. ராஜ்டிவிக்காக இந்தப் படத்தைத் தயாரித்துக் கொடுக்கிறார் ஏ.எம்.ரத்னம்.

ரவிகிருஷ்ணா நல்லா 'பேச' ஆரம்பிச்சுட்டீங்களா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X