மேக்கப் இல்லாத த்ரிஷா!

புதுமுகம் கணேஷ் ஐயருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இதுகுறித்து த்ரிஷா கூறியதாவது:
'அபியும் நானும் படத்தை பொறுத்தவரை கதையைக் கேட்டு ஆர்வமாகித்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். கூட நடிப்பவர்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. படப்பிடிப்பு நடந்த போதுதான் என்னுடன் புதுமுகம் நடிக்கவிருப்பதை தெரிந்து கொண்டேன். இயற்கையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா சொன்னதால் மேக்கப் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
மேக்கப் இல்லாமல் என்னைப் பார்த்தபிறகுதான், என் நடிப்பில் ஒரு வித்தியாசமிருப்பதைத் தெரிந்துகொண்டேன். இதன் பிறகு ஒப்புக் கொண்ட மர்மயோகியிலும் மேக்கப் போடாமல்தான் நடிக்கிறேன், எனும் த்ரிஷா நடித்து அடுத்தடுத்து வரவிருப்பவை சென்னையில் ஒரு மழைக்காலம், சர்வம் என பெரிய பட்ஜெட் படங்கள்!
Comments


Click it and Unblock the Notifications