நயனை நாடும் விஜய்!

அஜீத், திரிஷாவை வைத்து கிரீடம் படத்தை இயக்கிய விஜய் அடுத்து பொய் சொல்லப் போறோம் என்ற படத்தை இயக்கி வருகிறார். விஜய்யின் குருவான பிரியதர்ஷன்தான் இப்படத்தை தயாரிக்கிறார்.
கண்ட நாள் முதல் நாயகன் கார்த்திக்தான் இப்படத்தின் நாயகன். பழம்பெரும் இயக்குநர் மெளலி முக்கிய கேரக்டரில் நகைச்சுவையில் கலக்குகிறாராம். ஸ்ரீகுமார் இசையமைத்துள்ளார். ஏப்ரலில் படம் தியேட்டர்களுக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜீவாவை வைத்து இளமை ததும்பும் புதிய படத்தை இயக்கவுள்ளார் விஜய். இப்படத்தல் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்குமாறு கோரி நயனதாராவை அணுகியுள்ளாராம் விஜய்.
ஏற்கனவே ஜீவாவும், நயனதாராவும் ஈ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல இந்தப் படமும் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் உள்ளார் விஜய்.
ஜெமினி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











