கவர்ச்சி தான் ருசிக்கும்!-விமலா

By Staff

Vimala Raman
கவர்ச்சி காட்டினால்தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்கிறார் நடிகை விமலா ராமன்.

பொய் படத்தில் பாலச்சந்தாரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் விமலா. அதன் பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், ராமன் தேடிய சீதையில் சேரனின் ஜோடியாக நடித்து முத்திரை பதித்தார். அப்படியும் வாய்ப்புகள் சரியாக அமைந்தபாடில்லை.

தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இரு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தனது படங்கள் குறித்து அவர் கூறுகையில்,

மலையாளப் படங்களில் நடிப்பதால் தமிழில் இருந்து ஒதுங்கி விட்டதாக அர்த்தம் இல்லை. தமிழ் படத்தில் நடிக்கும் முன்பே மலையாள வாய்ப்புகள் வந்தன. இப்போது அவற்றில் நடிக்கிறேன்.

சுரேஷ் கோபியுடன் 'டைம்' படத்தில் பூக்காரி வேடத்தில் நடித்தேன். என் கேரக்டர் பேசப்பட்டது. இப்போது கேரளாவில் நான், எங்கு சென்றாலும் ரசிகர்கள் பறக்கும் முத்தம் தருகிறார்கள்.

பிரயாணகாலம் என்ற படத்தில் நடித்து வருகிறேன். ஜூன் மாதம் இப்படம் ரிலீசாகிறது. மோகன்லால் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு படங்களில் இருந்தும் வாய்ப்புகள் வருகிறது.

தேவதாசி வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. கிளியோபட்ரா வேடத்திலும் நடிக்க விருப்பம்.

சினிமாவில் எந்த நடிகையும் கவர்ச்சி காட்டாமல் நிலைக்க முடியாது. உணவு ருசியாக இருக்க உப்பு சேர்க்கிறோம். உப்பு இல்லாமல் உணவு சுவைக்காது. கிளாமரும் அப்படித்தான். அதுவும் இன்றைய சினிமாவின் முக்கிய அம்சமே கிளாமர்தான். அப்படி நடிக்க நான் மறுக்கவும் இல்லை. நல்ல வாய்ப்பு வரட்டும், அப்புறம் பாருங்கள் என் கிளாமர் நடிப்பை என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X