விந்தியா-சொர்ணமால்யா 'கபடி'!

By Staff

Swarnamalya
விந்தியாவும் சொர்ணமால்யாவும் இணைந்து கவர்ச்சி கபடி ஆடியிருக்கும் 'அழகு நிலையம்' திரைப்படத்தை தூசி தட்டி வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர் அப்படத்தின் தயாரிப்பாளர்கள்.

நடிகை விந்தியா நாயகியாக நடித்துள்ள இந்தப்படம் சில வருடங்களுக்கு முன் பூஜை போடப்பட்டது. ஆனால் அதற்குள் விந்தியாவின் மார்க்கெட் அதலபாதாளத்துக்குப் போய்விட, படமும் பெட்டிக்குள்ளேயே முடங்கி விட்டது.

இந்தப் படத்தில் யோகா டீச்சராக நடித்துள்ளார் விந்தியா. கவர்ச்சியில் பல படிகள் கீழிறங்கி இருக்கிறாராம். இது போதாதென்று, கவர்ச்சி 'குண்டு' சொர்ணமால்யா வேறு தன் பங்குக்கு கன்னாபின்னாவென்று கவர்ச்சி காட்டியிருக்கிறாராம்.

அதிகபட்ச குறைந்த உடையில் தோன்றுவது யார் என இருவருக்கும் பெரிய போட்டியே நடந்துள்ளதாம் இப்படத்தின் ஒரு பாடல் காட்சியில். சபாஷ் சரியான போட்டி என்று ரசிகர்கள் தொடையில் தட்டி (அவரவர் தொடையில்தான்) குஷியாகப் படத்தைப் பார்ப்பது நிச்சயம் என்கிறார்கள்.

இவ்வளவு 'சிறப்புகள்' படத்தில் இருந்தாலும், படம் போனியாகாமல் இருப்பது ஏன் என நண்பர்கள் கேட்ட கேள்வியில் சிலிர்த்து எழுந்த படத்தின் தயாரிப்பாளர், எடுத்த வரைக்கும் உள்ள காட்சிகளை பிரசாத் லேப்பில் மீண்டும் போட்டுப் பார்த்தாராம். சில விநியோகஸ்தர்களுக்கும் போட்டுக் காட்டியதில், படத்தை உடனே வாங்க அட்வான்ஸ் கொடுத்து விட்டார்களாம்.

பிறகென்ன, படத்தை அடுத்த மாதம் வெளியிடும் வேலையில் வேகவேகமாக இறங்கியுள்ளது தயாரிப்பு பார்ட்டி.

இப்போதுதான் விந்தியாவுக்கு கல்யாணமானது. குடியும், குடித்தனமுமாக சந்தோஷ வாழ்க்கையை ஆரம்பித்துள்ள விந்தியாவுக்கு இந்தச் செய்தி இனிப்பாக இல்லையாம்...

என்ன செய்வது... உரலுக்குள் தலையைக் கொடுத்தபிறகு விழுகிற இடிக்குப் பயந்தால் என்னாவது?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X