பல மொழிகளில் மணம் பரப்பும் ஜெனிலியா!
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் ஜெனிலியா பிசியோ பிசி
அகன்ற வாய் அழகி ஜெனிலியா கை நிறையப் படங்களுடன் பரபரப்பாக காணப்படுகிறார்.
தமிழில் ஆரம்பித்த இவரது திரையுலக வாழ்க்கை இன்று தமிழையும் தாண்டி தடம் புரளாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
கை நிறையப் படங்களுடன், பல மொழிகளில் படு பிசியாக நடித்து வருபவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். சந்தோஷ் சுப்ரமணியத்திற்குப் பிறகு ஜெனிலியாவுக்கு தமிழில் நல்ல மார்க்கெட் கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெனிலியா.
அதேபோல வினய்யுடன் இணைந்து இன்னொரு தமிழ்ப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெனிலியா.
இதுபோல மலையாளத்தில் உருவாகியுள்ள உருமி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
பிறகு தெலுங்கிலும், இந்தியிலும் தலா ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் ஜெனிலியா.
கை நிறையப் படங்களுடன் படு சந்தோஷமாக ஓடியாடி நடித்துக் கொண்டிருக்கும் ஜெனிலியா, தற்போது தான் நடித்து வரும் அத்தனை படங்களிலும் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று பெரிய பற்கள் தெரிய சிரித்தபடி கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











