'சல்லு'வுடன் ஆசின் 'மல்லுக்கட்டு'!

இப்போது சல்மான்கானுடன் (செல்லமாக சல்லு) லண்டன் ட்ரீம்ஸ் எனும் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அசின், இந்தப் படத்தில் தனி கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
விபுல்ஷா இயக்கும் லண்டன் ட்ரீம்ஸ் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் நடிக்க வாய்மொழியாக கடந்த ஆண்டே உறுதி கொடுத்துவிட்டாராம் அசின். ஆனால் அதை இப்போதுதான் அவரது கால்ஷீட்டைக் கவனிக்கும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சல்மான், அசின் இருவரின் அடுத்த படங்கள் இரண்டுமே, பிரபலமான தமிழ் படங்களின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. சல்மானின் போக்கிரி படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அசின் நடிக்கும் கஜினி படமும் முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது.
தமிழில் இந்தப் படங்களை இயக்கியவர்களே இந்தியிலும் இயக்குகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











