விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசினுக்கு ரூ.2 கோடி?

By Staff

Asin
இந்திப் படங்களில் படு பிஸியாக இருக்கும் ஆசின், இப்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதுவும் விஜய் நடிக்கும் படத்தில்.

ஏவிஎம் நிறுவனத்தின் எம்.பாலசுப்பிரமணியன் தயாரிக்கும் இந்தப் புதுப்படத்துக்கு வேட்டைக்காரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருந்தவர் நயன்தாரா. ஆனால் சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. எனவே ஆசினை அப்ரோச் செய்துள்ளனர் விஜய் தரப்பில்.

விஜய்யின் மனைவி சங்கீதாவும் ஆசினும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் சங்கீதா மூலமாகவே லண்டனில் இந்திப் பட ஷூட்டிங்கில் இருந்த ஆசினிடம் பேசப்பட்டதாம். அவரும் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் படத்துக்காக ஆசினுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம், தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவரை வேறு எந்த நடிகைக்குமே தரப்படாத மிகப்பெரிய தொகை. அதாவது ரூ.2 கோடி!

இதுகுறித்து ஆசின் கூறுகையில், விஜய்யின் மனைவி என்னிடம வேட்டைக்காரன் பட வாய்ப்பு குறித்து பேசியது உண்மைதான். நான் இந்தியா வந்தபிறகு தேதிகளை முடிவு செய்துவிட்டு இந்தப் படத்தில் நடிப்பது குறித்து அறிவிப்பேன், என்றார்.

ஆசின் நடித்துள்ள இந்தி கஜினி இம்மாத இறுதியில் வெளியாகிறது (எத்தனை வருஷம்!). இப்போது சல்மான்கான் ஜோடியாக லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புதான் லண்டனில் நடந்து வருகிறது.

காஸ்ட்லி கால்ஷீட்தான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X