கார்த்திகா மீது புகார்!

தூத்துக்குடி படத்தில் கருவாப்பையா, கருவாப்பையா... என பாடி அறிமுகமானவர் கார்த்திகா. பின்னர் பிறப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது ராமன் தேடிய சீதை படத்தில் நடித்து வருகிறார்.
விருகம்பாக்கத்தில் தனது தாயுடன் வசித்து வருகிறார்.
இவருக்கு எதிராக ஆர்.மணிவண்ணன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
விருகம்பாக்கம் எஸ்.பி.ஐ. காலனியில் எனக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதனை வாங்கியதற்கான கடன் தவணை தொகையை வங்கியில் செலுத்தி வருகிறேன்.
என்னுடைய இந்த குடியிருப்பில் நடிகை கார்த்திகா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குடி வந்தார். ஒரு மாதம்தான் வாடகை தந்தார். அதன் பிறகு கடந்த 7 மாதங்களாக அவர் எனக்கு வாடகை தரவில்லை. இதனால் என்னுடைய வங்கி கடனை கூட அடைக்க முடியவில்லை.
இதுவரை நடிகை கார்த்திகா ரூ. 49 ஆயிரம் வாடகை பாக்கி வைத்துள்ளார். இதனை தருமாறு கேட்டால், கார்த்திகாவும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டு என்னை மிரட்டுகிறார்கள்.
வாடகை பாக்கியை கேட்டால் உன்னையும், உன்னுடைய குடும்பத்தையும் கொலை செய்துவிடுவோம் என்று நடிகை கார்த்திகா தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு என்னை மிரட்டுகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...'
இந்தப் புகார் குறித்து கார்த்திகாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











